வார்சா, பிப். 27- உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு உள் ளது. இந்த நிலையில், போலந் துக்கான இந்திய தூதர் நக்மா மல்லிக் கூறும்போது, உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் மாணவர்கள், இந்தியர்கள் அனைவரையும் முத லில் தரை வழியாக போலந்துக்கு வருவதற்கு அந்நாடு எளிய வழி களை செய்துள்ளது. வேறு நாட் டினர் அனைவரையும் வெளியேற் றவும் போலந்து உதவிகளை செய்து வருகிறது என கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து மேற்குப் பகுதி வழியே வெளியேற வசதியாக நாங்கள் 3 குழுக்களை அமைத்துள் ளோம் என தெரிவித்து உள்ளார். இதற்கு முன், போலந்து வழியே வெளியேற விரும்பும் இந்தியர்க ளுக்கான சமீபத்திய அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டன.
இதன்படி, போலந்து வழியே வெளியேற விரும்பும் இந்தியர்கள் அதற்காக அமைக்கப்பட்டு உள்ள தூதரகங்களை அணுக வேண்டும். அதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
1) தொடர்பு அலுவலகம், விவேக்சிங், தொலைபேசி எண் +48 881 551 273.
2) தூதரக அலுவலகம், சுபம் குமார், தொலைபேசி எண் +48 575 467 147
3) தூதரக அலுவலகம், ரஞ்சித் சிங், தொலைபேசி எண் +48 575 762 557
இதுதவிர, தூதரக கட்டுப்பாட்டு அறை, வார்சா, சுக்வீந்தர் மாலிக் தொலைபேசி எண்கள் +48606 700105 மற்றும் +48225400000 ஆகி யவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
போலந்து-உக்ரைன் எல்லை வழியே வந்து சேரும் இந்திய குடி மக்கள் பேருந்து அல்லது டாக்சி ஆகிய பொது போக்குவரத்து வச தியை பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அவர்கள் செஹை னி-மெடிகா எல்லை வழியே கடந்து வரும்படியும் அறிவுறுத்தல் வழங் கப்பட்டு உள்ளது.
இந்த செஹைனி-மெடிகா எல்லை பகுதி வழியே மக்கள் நடந்து செல்ல மட்டுமே போலந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராகோவிக் எல்லை வழியே தங்களது சொந்த வாகனங்களில் கடந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
போலந்துக்குள் கடந்து செல்லும் இந்தியர்கள் கூகுள் விண் ணப்பத்தில் தங்களது விவரங்களை நிரப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தூதரகம் அறி வுறுத்தி உள்ளது.
இதற்கான கூகுள் விண்ணப்பம் https://forms.gle/TPmtUeMh98Q4XgvP9 ஆகும். இதன் அடிப்படையில், அவர்களது வேண்டுகோள்களை பரிசீலனை செய்து விமானங்களில் சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment