சென்னை, பிப். 27- தமிழ்நாட்டைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் 80-க்கும் மேற் பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின் றது. ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடு கள், மத்திய மற்றும் லத்தீன் அமெ ரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் மற் றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2021-2022 நிதியாண்டில் மட்டும் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டின் 2ஆவது அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற சாதனையை டிவிஎஸ் பெற்றுள் ளது. அந்நிறுவனத்தின் ‘அப்பாச்சி பைக்குகளே' அதிகளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.
இதுதவிர வெளிநாடுகளுக்கு என உருவாக்கப்பட்டு வரும் எச் எல்எக்ஸ் எனும் மாடலும், டிவி எஸ் ரைடர் மற்றும் டிவிஎஸ் நியோ ஆகிய ‘பைக்குகளும்' சிறப் பான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறு வனத்தின் புகழ்பெற்ற மாடல்க ளான ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்களை இந் தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
இதைத் தொடர்ந்து இந்த வாகன தயாரிப்பு நடவடிக்கையை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து மின்சார இருசக்கர வாகனங்களை அதிக அளவில் அறி முகம் செய்யவுள்ளதாக கூறியுள் ளன
இதன்பின் டி.வி.எஸ். நிறுவனம் புதிய தொழில்நுட்ப சலுகைகளு டன் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment