"கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்!’’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

"கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்!’’

தனி நபர் மசோதாவை தி.மு.. உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார்!

புதுடில்லி, பிப்.5- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் தனிநபர் மசோ தாவை நாடாளுமன்ற மாநிலங் களவையில் தி.மு.. உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார்.  கடந்த 1976 ஆம் ஆண்டு, பொதுப் பட்டியலில் கல்வி சேர்க்கப் பட்டது. இதனை மாற்றி மீண்டும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவை தி.மு..உறுப்பினர் வில்சன் மாநி லங்களவை யில் நேற்று (4.2.2022) தாக்கல் செய்தார்.

அப்போது அவர் உரையாற் றுகையில் குறிப்பிட்டதாவது:  மாநில அரசுகளின் கட்டமைப் பில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மாநில பட் டியலில் சேர்க்க வேண்டும், ஒன் றிய அரசு நேரடியாக நடத்தும் கல்வி நிறுவனங்களை மட்டும் ஒன்றிய பட்டியலில் வைக்க வேண்டும். இதற்கு ஏதுவாக அரசியல் சாசன திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 1976-ஆம் ஆண்டு கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட் டது, தொழில்நுட்பம், மருத் துவம், பல்கலைக் கழகங்கள் போன்றவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன. இதனை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப் படுத்தும் வகையில் இந்த மாற்றங் களை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் என அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment