'நீட்' விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு எதிரானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

'நீட்' விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு எதிரானது

புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, பிப்.5 நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத் துக்கு எதிரானது என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சட்ட சபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

இதுதொடர்பாக புதுச்சேரி யில் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அரசின் சட்டவரையறையை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதி காரம் உள்ளதாக கூறியுள்ளார். மாநிலங்களை பொறுத்தவரை சட்டத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றினால் ஆளுநர் விளக் கம் கேட்கலாம். விளக்கம் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதை தமிழ்நாடு ஆளுநர் மீறி இருக்கிறார். குறிப் பாக ஒன்றியத்தில் பா... ஆட் சிக்கு வந்தபிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஒற்றர்களாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment