கரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரானின் புதிய வடிவமும் தாக்க வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

கரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரானின் புதிய வடிவமும் தாக்க வாய்ப்பு

 லண்டன்,பிப். 25 ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரா னின் புதிய வடிவமும் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று டென் மார்க்கில் நடந்த ஆய்வு தகவல் கூறுகிறது.

ஒமைக்ரானின் புதிய வடிவம், இங்கிலாந்து நாட்டில் முதலில் வெளிப்பட்டு, அதற்கு பிஏ.2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது விசார ணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டி டியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.

இதில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* ஒமைக்ரான் வைரசின் வகை களான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய வற்றின் எழுச்சியுடன், முந்தைய நிகழ்வுகளில் (தொற்று பாதிப்புகள்) இருந்து அதிக எண்ணிக்கையிலான மறுதொற்றுகள் காணப்படுகின்றன.

* இது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் ஏற்படுகிற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து பிஏ.2 தப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

* பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் 187 பேருக்கு பிஏ.2 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 18 லட்சம் தொற்றுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.

* 67 பேருக்கு 20 முதல் 60 நாள் வரையிலான இடைவெளியில் மறுதொற்று ஏற்பட்டுள்ளது.

* பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலோர் இளைஞர்கள், தடுப் பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், லேசான தொற்று பாதிப்பை இவர்கள் சந்தித்துள்ளனர்.

* பாதிக்கப்பட்டவர்கள் மருத் துவமனைகளில் சேர்க்கப்படவில்லை. அதற்கான தேவை எழவில்லை.

* ஆய்வின் முடிவு, ஒமைக்ரான் வைரசின் 2 வெவ்வேறு வடிவம் ஒருவரை தாக்குவது சாத்தியம்தான்.என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment