போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும்

புதுடில்லி, பிப்.25 ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக, உலகளவில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்துள்ளதாவது:

ரஷ்யா  உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த போர் சூழல் காரணமாக,

மத்திய ஆசிய நாடுகள் ஏற்றுமதி அதிகரிக்கும்.

குறிப்பாக, சீனாவுக்கான சப்ளை அதிகரிக்க கூடும். இருப்பினும், பல ஆசிய நாடுகள் நீண்ட கால அளவில், கச்சா எண்ணெய்க்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பது, அவற்றுக்கு சற்று ஆறுதலான விஷயமாகும். இந்தியாவை பொறுத்தவரை, அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

இயற்கை எரிவாயு தேவையில் பாதியளவை இறக்குமதி செய்து கொள்கிறது. மேலும் நிதி சந்தைகளில் பாதிப்புகளை காண வாய்ப்புள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment