குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி பகுதிகளில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு. மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழக துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ். குமாரதாஸ், மாநகர துணை தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது, தோழர்கள் பி.கென்னடி, ம. செல்வராசு, முத்துவைரவன், ரெகு ஆகியோர் கலந்துகொண்டு கடைவீதிகளில் பொதுமக்களை சந்தித்து பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கி பிரச்சாரம் செய்தனர். பொதுமக்கள் பலரும் தோழர்களிடம் ஆர்வமுடன் துண்டறிக்கைகளை வாங்கி படித்து அறிவுத்தெளிவு பெற்றனர். புதிய தோழர் ரெகு தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment