கரோனா: இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து 3ஆவது இடத்தில் இந்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

கரோனா: இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து 3ஆவது இடத்தில் இந்தியா

புதுடில்லி, பிப். 5- உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலை களினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப் பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை தீவிரப் படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்த தொற்று பரவலால் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (4.2.2022) நாட்டில் கரோனா வைரஸால் இறந்தவர் களின் எண்ணிக்கை 5 லட்சத் தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் உயிரி ழந்துள்ள நிலை யில் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,00,055 ஆக உயர்ந் துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது.

உலகிலேயே மிகவும் மோச மான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,71,50,412 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 9,20,829 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 2,60,99,735 ஆகவும், உயிரி ழப்பு எண்ணிக்கை 6,30,001 ஆகவும் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 3ஆவது இடத்துக்கு இந் தியா வந்துள்ளது. இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 1,49,394 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.2.2022 அன்று பாதிப்பு 1.72 லட்சமாக இருந்த நிலையில், நேற்று 1.5 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 52 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment