மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப். 5- கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண் ணப்பம் வந்த 10 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரு கிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறியி ருப்பதாவது:
கரோனா தொற்றால் இறந்தவர் களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை எளிதாக்குவதற்கு மாநில சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட அர்ப் பணிப்புடன் செயல்படக் கூடிய தனி அதிகாரியை நியமிக்க வேண் டும்.
இறந்தவர்களின் பெயர், முக வரி, இறப்பு சான்றிதழ் என முழு விவரத்தையும் ஒரு வாரத்துக் குள் சம்பந்தப்பட்ட சட்டசேவை ஆணை யத்துக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவ றினால் இந்த விவகாரம் நீதிமன் றத்தால் மிகவும் தீவிரமாக எடுத் துக்கெள்ளப்படும்.
இறந்தவர்களின் குடும்பங்களை மாநில சட்ட சேவை ஆணையத் தினர் அணுகி, இழப்பீட் டுக்கு விண்ணப்பம் செய்வதை உறுதி செய்வார்கள். பாதிக்கப் பட்டவர் களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக அவர்கள் செயல்படு வார்கள்.
இழப்பீடு கேட்டு விண்ணப்பிக் காதவர்களை சென்றடைவதே சட்ட சேவை ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இழப்பீடு கோரும் விண்ணப் பங்களை குறைபாடுகளை சுட்டிக் காட்டி நிராகரிக்கக் கூடாது. அந்தக் குறைபாடுகளை சரிசெய்ய அவகாசம் அளிக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுகள் அனைத்து முயற் சிகளும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment