சென்னை, பிப்.27 சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மியாட் மறுவாழ்வு மய்யம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயல கத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த மறுவாழ்வு மய்யத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மேலும், மய்யத்தின் செயல் பாடுகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாசிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் கூறும்போது, “கரோனா தொற்று காலத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக பிரிவை அமைத்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குணப்படுத்தியுள் ளோம்.
கரோனாவைப் பொறுத்தவரை தற்போது 80 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்பு ஏற்படுகிறது. 15 சதவீதம் பேருக்கு தீவிர அறிகுறிகள் உள்ளன. 5 சதவீதம் பேர் மட்டுமே கடும் பாதிப்புக்கு உள்ளாகி, தீவிர சிகிச்சை பெறும் நிலைக்குச் செல்கின்றனர்.
கடும் தாக்கத்துக்கு உள்ளாகும் நபர்கள் கரோனாவிலிருந்து குண மடைந் தாலும், அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் குறைவதில்லை. குறிப்பாக, நுரையீரல் பாதிப்பு, நரம்பு சார் பிரச்சினைகள், இதயம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
இதனால், அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த மய்யத்தைத் தொடங்கியுள் ளோம். நுரையீரல் சீராக்கம், இயன்முறை சிகிச்சை, தொழில்முறை சிகிச்சை, இதய சீராக்க சிகிச்சை, நரம்பு பாதிப்புகளுக்கான கண் காணிப்பு, நடுக்குவாத சிகிச்சைகள் உட்பட பல்வேறு சிகிச்சைகள் இங்கு அளிக் கப்படுகின்றன.
இதற்காக மருத்துவ நிபுணர் களை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட சிறப்பு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது” என்றார்.
No comments:
Post a Comment