கரோனா பரவல் குறைவு கட்டுப்பாடுகளை தளர்த்த - மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

கரோனா பரவல் குறைவு கட்டுப்பாடுகளை தளர்த்த - மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை

புதுடில்லி, பிப்.27  கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி எல்லா வகை யான கட்டுப்பாடுகளையும் தளர்த்துமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்டு எழுச்சி பெற்ற கரோனாவின் 3-ஆவது அலை ஓய்ந்து வருகிறது. இந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான கரோனா கால வழிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து வகை கட்டுப்பாடுகளிலும் தளர்வுகளை வழங்குமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச தலை மைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய அரசின் உள்துறைச்செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* உள்ளூர் நிலைமையை கவனமாக ஆராய்ந்து, சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம், திருவிழா தொடர்பான கூட்டம் கூடுதல், இரவு ஊரடங்கு, பொதுப் போக்குவரத்து இயக்குதல், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவுவிடுதிகள், பார்கள், பள்ளிகள்-கல்லூரிகள்-அலுவலகங்கள் திறப்பு மற்றும் வணிக செயல்பாடுகள் ஆகியவற்றில் தளர்வுகளை வழங்குங்கள்.

* முகக்கவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், மூடிய இடங்களில் காற்றோட்ட வசதி ஆகியவை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

* ஒன்றிய சுகாதார அமைச்சகம் பரிந் துரைத்தபடி பொருளாதார நடவடிக்கைகளை திறப்பதன் அடிப்படையில் இடர் மதிப்பீட்டு அணுகுமுறையை செயல்படுத்துங்கள்.

* கரோனா பரிசோதனை, கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி, கரோனா கால பொருத்தமான நடைமுறைகளை தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போர்:

இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்ஸ்டேட் வங்கி கணிப்பு


கொல்கத்தா, பிப்.27 உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் வங்கி கணித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை யெடுப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை எதிர்நோக்கி உள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த போரால் இந்தியாவுக்கு ரூ.95 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என இந்திய ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில், உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்து விட்டது. அத்துடன் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தால், மாதம் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு குறைக்கப்படும் கலால் வரி அடுத்த நிதியாண்டிலும் தொடர்ந்து, 2023-ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வும் சுமார் 8-10 சதவீதம் அதிகரித்தால், 2023-ஆம் நிதியாண்டில் அரசின் வருவாய் இழப்பு சுமார் ரூ.95,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி

அமைப்புகளுக்கு ரூ.267 கோடி நிதி 

ஒன்றிய அரசு விடுவிப்பு

புதுடில்லி, பிப்.27 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 267 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், ஒன்றிய அரசு வசூ லிக்கும் வரிகளில் தமிழ்நாட்டின் பங்கு உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டிற்குள் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என வலுயுறுத்தினார்.

இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் 267 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது.

தமிழ்நாடு தவிர ஒரிசா, ஜார்க்கண்ட், கருநாடகா, கேரளா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை ஒன்றிய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

No comments:

Post a Comment