கோவில்பட்டி,பிப்.27- தனியார் தொலைக்காட்சியில் சமுதாய விழிப்புணர் வுக்காக நடத்தப்பட்ட தந்தைபெரியார் நாடகத்தில் தந்தை பெரியார் வேடமிட்ட குழந்தை பகுத்தறிவுக் கருத்துகளை மழலை மொழியில் எடுத்துரைத்ததை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
சமூக ஊடகங்களிலும் அதன் காட்சிப்பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்நாடகத்தில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளையும் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்து புத்தகங்களை பரிசளித்துள்ளார்.
இதனிடையே பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைக்கு முகநூலில் கொலை அச்சுறுத்தலுடன் பதிவிட்ட வெங்கடேசன் குமார் பாபு என்பவர்மீது அளிக்கப்பட்ட புகாரைத்தொடர்ந்து 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அவர் சிறைக்காவலில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment