வெளிநாட்டில் படித்த மருத்துவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் குறைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

வெளிநாட்டில் படித்த மருத்துவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் குறைப்பு

சென்னை, பிப்.27  வெளிநாட்டில் படித்த மருத்துவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்தை குறைக்க அரசு ஒப்புதல் வழங்கியதற்காக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி நன்றி தெரிவித்தார்.

வெளிநாட்டில் மருத்துவம் படித்து எப்.எம்.ஜி. தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சிக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.3,54,000 ஆக இருந்தது. இந்த பிரச்சினையை, எப்எம்ஜி மருத்துவர்கள் சார்பாக அரசின் கவனத்துக்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கொண்டு சென்றார்.

தமிழ்நாட்டில்தான் இக்கட்டணம் அதிகமாக உள்ளதுஎன சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோரிடம் எப்.எம்.ஜி. மருத்துவர்கள் சார்பில் லிம்ரா நிறுவனம் முறையிட்டது. இதையடுத்து, துறை செயலர், துணைவேந்தர் ஆய்வு செய்து, கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரைத்தனர். கட்டணத்தை குறைக்குமாறு முதலமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, இக்கட்டணத்தை ரூ.29,400 ஆக குறைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக இருந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தியதற்காக, அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணைவேந்தர் சுதா சேஷய்யனை லிம்ரா நிறுவனர் முகமது கனி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உக்ரைனில் உள்ள  இந்தியர்களுக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை

 உதவி மய்ய எண்கள் அறிவிப்பு

மாஸ்கோ, பிப்.27 உக்ரைனில் இந்தியர்களை வெளியேற்ற உதவியாக இந்திய வெளியுறவுத்துறை உதவி மய்யங்களை அமைத்துள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியாக மேற்கு உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளின் எல்லையில் வெளியுறவுத்துறை உதவி மய்யங்களை அமைத்துள்ளது.

தகவல்களுக்கு 1800 118797, +91 112 301 2113, +91 112 301 4104, +91 112 301 7905 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். உக்ரைன், கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள +380 9973 00428, +380 9973 00483, +380 9339 80327 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். உக்ரைன், செர்னிவ்சிவில் உள்ள உதவி மய்யத்திற்கு +48 575 762 557, +48 660 460 814 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment