தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடை

இராமநாதபுரம் மாவட்ட - பொதுக்குழு உறுப்பினர் தோழர் கே.எம்.சிகாமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை சந்தித்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500 வழங்கினார்.உடன் இராமநாதபுர மாவட்ட மகளிரணி  அமைப்பாளர் தோழர் எஸ்.கிருஷ்ணவேணி. (பெரியார் திடல், 25.2.2022).

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் - முனைவர் இரா.சுப்பிர மணி (இயக்குநர் (பொது), பெரியார் இருக்கை, அறிஞர் அண்ணா இருக்கை, கலைஞர் ஆய்வு மய்யம் இருக்கை), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து, ‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?' ‘தந்தை பெரியாரின் இதழியல்' என்ற நூலினையும் மற்றும் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000/-த்தினையும் ஆசிரியர் இடத்தில் வழங்கினார். (பெரியார் திடல், 25.2.2022).

திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசனிடம் மாவட்ட  மகளிர் பாசறை அமைப்பாளர் விஜயா அன்பழகன் பெரியார் பிஞ்சு இதழுக்கான 11ஆண்டு சந்தாக்களையும், விடுதலை நாளிதழுக்கான 6 ஆண்டு சந்தாக்களையும் வழங்கினார்.

No comments:

Post a Comment