கீவ், பிப். 26- உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் 24.2.2022 அன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக் குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட் டுள்ள காட்சிப்பதிவில் கூறியதா வது;-
“அய்ரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வரு கிறது. ரஷ்யா என்னை முதல் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும் பம்தான் அவர்களின் இரண் டாவது இலக்கு.
உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர். நான் கீவ் நகரத்திலேயே இருப்பேன். எனது குடும்பத்தினரும் உக் ரைனில் தான் இருக்கிறார்கள். ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வரும் நிலையில், நான் உக்ரை னின் தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சக்தி வாய்ந்த நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன
மேலும் கூறுகையில், உல கின் சக்தி வாய்ந்த நாடான ரஷ்யாவை எப்படி தனியாக எதிர்த்தோமோ, அதேபோல தான் இன்றும் தனியாக எதிர்த்து வருகிறோம். உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன. மேற்கத் திய நாடுகள் எங்களை முற்றிலு மாக கைவிட்டுள்ளது; இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தரு கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவில் போராட்டம் நடத் தும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.
புதினுடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை
உக்ரைன் விவகாரம் தொடர் பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரான்ஸ் அதி பர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை நடத்தி வருவதாக ரஷ்ய அதிபர் அலுவலகம் அதி காரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் பிரான்ஸ் உள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதி னுடன் மேக்ரான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment