போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சு வார்த்தை நடத்த தயார் - உக்ரைன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சு வார்த்தை நடத்த தயார் - உக்ரைன் அறிவிப்பு

கிவ், பிப். 26- உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3ஆவது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாரக உள்ளது. பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசித்து வருகிறது என்றார்.


No comments:

Post a Comment