மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை

கீவ், பிப். 26- உக்ரைனில் 2ஆவது நாளாக தொடர்ந்து  ரஷ்ய படை கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொது மக்கள் என இதுரை 137 க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொரு ளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் போர் நடை பெற்று வருவதால் தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை அழும் காட்சிப் பதிவு வைரலாகி வருகி றது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை ரஷ்ய படைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழும் காட்சிப்பதிவு ஒன்று பார்ப்பவர்களின் மனதை நொறுங்கும் வகையில் உள்ளது. இந்த காட்சிப் பதிவில் பிங்க் நிற ஜாக் கெட்டை அணிந்திருக் கும் சிறுமி தனது தந்தையை கட்டிப்பிடித்த அழும் காட்சிப்பதிவு வைரலாகி உள்ளது.

No comments:

Post a Comment