புதுச்சேரி, பிப். 25- புதுச்சேரி யில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.2.2022 அன்று காலை 11 மணி அளவில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாநில பகுத்தறிவாளர் கழக தலை வர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் கைலாச நெ.நடராஜன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவா ளர் கழக துணை பொதுச் செயலாளர் இளவரசி சங் கர் வரவேற் புரையாற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் அறிமுக உரைக்கு பின் கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன் பன் (எ) இரா.கந்தசாமி, செயலாளர் பெரியார் செல்வன், புதுச்சேரி மண் டல திராவிடர் கழக அமைப்பாளர் இர. இராசு, பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி மாநில தலைவர் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ. மோகன், தமிழ்நாடு உள் ளிட்ட புதுச்சேரி பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் இரஞ் சித்குமார், ஆகியோர் கருத்துரையாற்றினார்.
தமிழ்நாடு பகுத்தறி வாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழகத் தின் செயல்பாடுகள் அதற்கு தமிழர் தலைவரின் ஆலோ சனைகள், உறுப்பினர் சேர்க்கை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist இதழ்களை பரப் புவது குறித்து விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங் கள்
1. செஞ்சியில் நடை பெற விருக்கின்ற பகுத்தறி வாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வதுடன் முழு ஒத்துழைப்பு தருவது.
2. பகுத்தறிவாளர் கழ கத்திற்கு உறுப்பினர் களை மாவட்டத்திற்கு 25 வீதம் சேர்ப்பது, பகுத் தறிவாளர் கழகத்தை செம்மைப் படுத்துவது.
3. பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் பெரியா ரியல் பயிற்சிப் பட்ட றைகளை நடத்துவது.
4. பெரியார் பிஞ்சு, The Modern Rationalist இதழ்களை பரப்ப சந்தாதாரர் கள் சேர்ப்பது போன்ற தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது.
பகுத்தறிவாளர் கழக புதுச்சேரி தலைவர் நெ. நடராசன் நன்றி உரை யாற்றினார்.
நிகழ்ச்சியினை ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார் ஒருங்கிணைத்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதுச் சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், பெரியார் பெருந்தொண்டர் எஸ். கிருஷ்ணசாமி, பா.கும ரன், புதுச்சேரி நகராட்சி தி.க. அமைப்பாளர் மு. குப்புசாமி, ஆ.சிவராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பகுத்தறி வாளர் கழக கலந்துரை யாடல் கூட் டத்தில் புதிய பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment