சுயமரியாதைச் திருமணச் சட்டம் நாடுமுழுவதும் கொண்டு வரக்கோரி தனி நபர் மசோதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

சுயமரியாதைச் திருமணச் சட்டம் நாடுமுழுவதும் கொண்டு வரக்கோரி தனி நபர் மசோதா

மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் மக்களவையில் தாக்கல்

புதுடில்லி, பிப். 9- நாடாளுமன்ற தரும புரி தொகுதி திமுக உறுப் பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் மக்களவையில் சுயமரியா தைச் திருமணச் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வரக்கோரி தனி நபர் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

தந்தை பெரியாரின் முக்கிய மான கொள்கைககளில் ஒன்று சுய மரியாதை திருமணம்.  சுயமரியதை திருமணத்தை சட்ட மாக்குவதற் காக   அறிஞர் அண்ணா முதலமைச் சராக இருந்த பொழுது 1967ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் இந்த சுயமரியாதை திரு மணச் சட்டத்தை இந்தியா முழு வதும் கொண்டு வர வண்டும் எனத் தனிநபர் மசோதாவை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத் துவர் டி.என். வி.எஸ். செந்தில்குமார்  தாக்கல் செய்தார். சுயமரியாதைத் திருமணம் என்பது மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திரு மணம், சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணம் ஆகும். நண்பர்கள், உறவினர்கள், முன்னிலையில் சுயமரியாதை திரு மணம் செய்து கொள் ளலாம். மணமக்கள் ஒருவரை கணவன் அல் லது மனைவியாக ஏற் றுக் கொள்கிறவர்கள்  தனக்கு தெரிந்த மொழி யில் உறுதி மொழி ஏற்றால் போதுமானது. இந்த தனி நபர் மசோ தாவின் நோக்கம், கார ணம் என்னவென்றால் சுயமரியாதைத் திரு மணச் சட்டம் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் நடைபெற்று இருப் பதாலும் இவை இந்தியா முழுவ தும் தாக்கத்தை ஏற்படுத்த வேண் டும் என்பதாலும் கொண்டு வரப்படுகிறது.

இந்த மசோதாவின் உயரிய நோக்கங்கள் ஜாதி மறுப்புத் திருமணம், பாலின சமத்துவம், விதவை மறு மணம், தேவையற்ற திருமண செலவுகளை தவிர்ப்பது மற்றும் பகுத்தறிவு

ஆகியவற்றை ஊக்குவிப்பது ஆகும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் தாக்கல் செய்த தனி நபர் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment