சென்னை, பிப். 9- கேரளா, ஆந்திரா எல்லை மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி கண்காணிக் கப்படுகிறது என்றும், பொது மக்கள் கவனக்குறைவாக இருந் தால் மீண்டும் கரோனா பாதிப்பு உயரும் என்றும் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ் ணன் முழு கவச உடை அணிந்து ஆய்வு செய்தார். அப்போது கரோனா நோயாளிகளுக்கு வழங் கப்ப டும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும், நோயாளி களிடமும் கேட்டறிந்தார். ஆய் வின் போது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தி மலர் உடன் இருந்தார். இதையடுத்து செய்தி யாளர்களிடம் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜனவரி 20ஆம் தேதியொட்டி அதிகளவில் இருந்த கரோனா பாதிப்பு 6 ஆயிரம் அளவில் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு குறைந்த போதி லும், ராணிப் பேட்டை, கிருஷ்ண கிரியில் 10 சதவீதத் துக்கு மேல் நோய்த் தொற்று பாதிப்பு இருக் கிறது. கேரளா எல்லையையொட்டி இருக்கும் மேற்கு மாவட்டங் களான, கோவை, தேனி, நாமக் கல், சேலம், ஈரோடு போன்ற மாவட் டங்களில் தொடர்ந்து தனி கவனம் செலுத்தி கண் காணிக்கும் கட்டா யத்தில் இருக்கிறோம்.
4 சதவீத படுக்கைகள்
அதேபோல், ஆந்திரா எல்லை யில் இருக்கும் திருவள்ளூர் மாவட் டத்திலும், சுற்றுலாத் தலமான நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்திலும் தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக நோய் பாதிப்பு குறைந்து வருவதால், நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை யில் இருப்பவர்களின் எண் ணிக்கையும் மளமளவென குறைந்து உள்ளது. கரோனா வுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட படுக்கைகளில், தற் போது 5 ஆயிரத்து 975 பேர் மட் டுமே மருத்துவமனைகளில் படுக் கைகளில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 சதவீத படுக்கைகள் மட்டுமே மருத்துவ மனைகளில் நோயாளி களின் பயன்பாட்டில் உள்ளது.
நோய் தொற்று குறைந்து வரு வதால், நோய் பாதுகாப்பு யுக்தி களை பொதுமக்கள் பின் பற்று வதே இல்லை. முககவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப் பிடிப்பதை நிறுத்திவிட்டனர். பொது மக்கள் இதில் கவனக் குறைவாக இருந்தால், கரோனா பாதிப்பு மீண்டும் ஏற்றத்துக்கு வரும்.
1.6 கோடி பேர் தடுப்பூசி போடவில்லை
தடுப்பூசியை பொறுத்து வரை 9.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு 5.25 கோடி முதல் தவணை தடுப்பூசியும், 4.05 கோடி 2ஆவது தவணை தடுப் பூசியும், 15 முதல் 18 வயதுக் குட்பட்டவர்களுக்கு 26.72 லட்சம் முதல் தவணை தடுப் பூசிகளும், 5.47 லட்சம் 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத் தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப் பூசியை பொறுத்தவரை 4.83 லட் சம் பேருக்கு போடப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சம் பேர் இன் னும் 2ஆவது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 76.67 லட்சம் பேரும், கோவேக்சின் தடுப்பூசி 36.73 லட்சம் பேரும் போடாமல் உள்ளனர்.
பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தால்தான் 3ஆவது அலையில், உயிரிழப்பு அதிகளவில் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம்
இன்னுயிர் காப்போம் திட்டத் தின் மூலம் இறப்பின் சதவீதம் குறைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இது வரை 14 ஆயிரத்து 313 பேர் சிகிச் சைக்காக அனுமதிக் கப்பட்டு, 84.73 சதவீதம் பேர் அரசு மருத் துவமனையிலும், 15.27 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.13.40 கோடி நிதி உதவி பெற் றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment