சமூக அநீதியாகவுள்ள ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

சமூக அநீதியாகவுள்ள ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்

சட்டப் பேரவையில் ஆளுநருக்கு எதிராக கட்சிகள் கருத்து

சென்னை, பிப்.9. 'நீட்'விலக்கு சட்டம் மசோதாவை திருப்பி அனுப்பியதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுந ருக்கு எதிராக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தன. 'நீட்' ஒழிக்கப்பட வேண்டும் என்றனர்.

நேற்றைய (8.2.2022) சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் சட்டமன்ற கட்சிக்கு ஒருவர் என்ற வீதத்தில் சட்டமன்ற உறுப்பி னர்கள் உரையாற்றினர். அதன் விவரம் வருமாறு:

பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்): நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். அதிமுக அரசு கொண்டுவந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): சட்டசபையில் நிறைவேற் றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கக்கூடிய செயல் அல்ல. மாநில அரசுப் பட்டியலில் இருக்கும் சட்டமசோதாவை மட்டுமே ஆய்வுக்காக அவரால் திருப்பி அனுப்பிவைக்க முடியும். ஒன்றிய அரசுப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியலில் இருக்கும் இதுபோன்ற மசோதாக்களை பேரவை தலைவருக்கு திருப்பி அனுப்புவது, அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். மாணவர்களுக்கு மனச்சி தைவை உள்ளாக்கும் 'நீட்' தேர்வினால் 20-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 'நீட்' தேர்வு பயிற்சி மய்யங்களில் ரூ.3லட்சம் முதல் ரூ.5 லட்சம் கட்டணம் பெறுகின்றனர். தேர்வில் வெற்றி பெற்றால் கூட அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை . சமூக அநீதியாக உள்ள 'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்.

ஈஸ்வரன் (கொங்கு மக்கள் தேசிய கட்சி):- 8 கோடி தமிழர் களின் ஒருமித்த முடிவுதான் 'நீட்' விலக்கு. ஆனால் ஆளுநர் எனக்குத் தெரிந்தவரை என்று சில கருத்துகளைக்கூறி மசோதாவை திருப்பி அனுப் பியுள்ளார். 8 கோடி மக்கள் எடுத்த முடிவை ஆளுநர் என்ற தனிப்பட்ட ஒருவர் திருப்பி அனுப்புவது வேதனை அளிக்கிறது.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):-  'நீட்' என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது. சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஏற்ப ஆளுநர் அதிகாரம் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி .கே.ராஜன் குழுவின் அறிக்கைபற்றி காமாலை கண் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது, ஒட்டு மொத்த தமிழர்களையும் விமர்சித்ததாகவே அமைந்துள்ளது.

சதன் திருமலைக்குமார் (.தி.மு..):- நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய கார ணங்கள் ஏற்கத்தக்கதல்ல. ஆளுநரின் வரம்புகள், அரசமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டவைதான். நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறை வேற்றப்படுவதை .தி.மு.. வரவேற்கிறது.

டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) :- சமூக நீதியின் ஆணி வேருக்கு வெந்நீரை ஊற்றுவது போல 'நீட்' தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் அந்த மசோதாவிற்கு கருத்து கூறும் அதிகாரம் அவருக்கு இல்லை. கூட்டாட்சி தத்து வத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிராக ஆளுநரின் செயல்பாடு உள்ளது.

 நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) :- மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயலாகும். அவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள மாபெரும் துரோகம், அரசியல் சாசன வழி காட்டு நெறிமுறைகளை மீறி தனிச்சையாக முடிவை ஆளுநர் எடுத்துள்ளார்.

எஸ்.எஸ். பாலாஜி (விடுதலைச் சிறுத் தைகள் கட்சி) :- 'நீட்' தேர்வு விஷயத்தில், இந்தத் தேர்தலில் வாக்களித்து அரசை தேர்வு செய்த மக்களுக்கும், 230 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், முதல்-அமைச்ச ருக்கும் இல்லாத அக்கரை, தமிழ்நாட்டிற்கு வந்த சில நாட்களில் அவருக்கு வந்துள்ளது. மரத் தின் நிழலுக்கும், பாம்பின் நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத தவளை போன்ற சமூகமல்ல தமிழ் சமூகம், 'நீட்', நுழைவுத் தேர்வு எதுவுமே தமிழகத்திற்கு தேவை யானது அல்ல. பெருந் தொகை கட்டணம் செலுத்துகிறவர்களுக்கே மருத்துவக் கல்விகிடைக்கிறது. இது சமூகநீதிக்கு மட்டுமே எதிரானது அல்ல. இயற்கை நீதிக்கும் எதிரானது.

எஸ்.பி. வெங்கடேசன் (பா..): தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது இல்லை. 'நீட்' தேர்வில் விலக்கு பெற 2018ல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்கூட குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதை திருப்பி அனுப்பியதை ஏற்க முடியாது. நீட் தேர்வை தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) :- மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது. தமிழ்நாடு மக்களை அவமானப் படுத்தியதாக உள்ளது. ஆளுநரின் வரம்பு பற்றி அரசியல் சாசனம் தெளிவுபடுத்துகிறது. பேரவைத் தலைவருக்கு ஆளுநர் எழுதி அனுப்பியுள்ள குறிப்புகளும் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு சம்பந்தப்படாத வழக்கில் கூறப்பட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கும் அதற்கும் சம் பந்தம் இல்லை . தமிழ்நாடு மாணவர்களின் நலன் கருதியே நீதிபதி .கே.ராஜன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

எதிர்கட்சித் தரப்பில் மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர்:   “அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு பெற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பல்வேறு அரசியல்  அழுத்தத்திற்கும் இடையில் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டோம்என்றார். நீட் எதிர்ப்பில் அதிமுக எப்போதும் பின்வாங்கியது இல்லை. அதிலிருந்து ஒரு துளிகூட தடம் மாறவும் இல்லை. ஆனால் அதிமுக யாருக்கோ அடி பணிந்து விட்டது என்ற தவறான தகவலை பரப்பி  வருகிறார்கள். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக  இப்போதும் உறுதியாக இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் சட்டப் போராட்டங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதில் மாற்றுக் கருத்தே இல்லைஎன்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: நீட் எதிர்ப்பு விவகாரத் தில் அதிமுக எப்போதும் உறுதியாக உள்ளது  என்றும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லைஎன்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

No comments:

Post a Comment