சென்னை, பிப்.9 தமிழ் நாடு சட்டப் பேரவையில் நேற்று (8.2.2022) நீட் தேர்வை விலக்க வேண் டும் என்ற சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற் றப்பட்டது. இது சட்ட மாக மாறும் நடைமுறை குறித்து பார்ப்பேம். சட் டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உடன டியாக ஆளுநர் அலுவ லகத்திற்கு அனுப்பி வைப் பதாக சட்டப்பேரவை யில் பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, அந்த மசோ தாவின் உண்மை நகலை சட்டசபை செயலகம் தயாரிக்கும். அதற்கு சபா நாயகர் ஒப்புதல் அளிப் பார். அவரது கையொப் பத்தைப் பெறப்பட்ட பிறகு அது சட்டத் துறைக்கு அனுப்பி வைக் கப்படும். அங்கிருந்து அந்த மசோதா தமிழ்நாடு அரசின் சுற்றுக்கு விடப் படும்.
பின்னர் சட்டத்துறை செயலாளர் மூலம் தலை மைச் செயலாளர், முதல மைச்சர் ஆகியோரின் பார்வைக்கு மசோதா அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநரின் பார்வைக்கு மசோதா அனுப்பி வைக் கப்படும். அந்த மசோ தாவை ஆளுநர் ஆராய் வார். ஆளுநர் மட்டுமே ஒப்புதல் அளித்தால் போதுமானதா? அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டுமா? என்பதை முடிவு செய்து, ஆளுநர் அதை குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைப் பார்.
அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும், ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியும் கிடைத்து விட்டால், அதன் பிறகு அதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளி யிடும். அதன் பின்னரே அது சட்டமாக அம லாகும்.
No comments:
Post a Comment