சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர்-19, வணிக வரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்-14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற் கான முதன்மை தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங் கியது. சென்னையில் மொத்தம் 37 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. முதல் நாளான கடந்த 4ஆம் தேதி முதல் தாள் தேர்வு நடந்தது. 5ஆம் தேதி (நேற்று முன்தினம்) இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இறுதி நாளான நேற்று (6.3.2022) 3ஆம் தாள் தேர்வும் நடந்தது. 3 நாட்கள் நடந்த குரூப் 1 முதன்மை தேர்வுகான விடைத்தாள்கள் திருத்தப் பட்டு, மே மாதம் மத்தியில் முடிவு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Monday, March 7, 2022
குரூப் 1 தேர்வு : 66 பதவிகளுக்கு 3,800 பேர் எழுதினர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment