சென்னை, மார்ச் 7 இந்திய மருத்துவர்கள் சங்கம் (அய்எம்ஏ) சார்பில், பன்னாட்டு மகளிர் தினத்தை முன் னிட்டு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நேற்று (6.3.2022) காலை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் தாம்பரம் காவல் ஆணையரான ரவி, தனது மகள் டாக்டர் இதழ்யா ரவியுடன் பங்கேற்று, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முழக்கம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பேரணி முடிவில் காவல்துறை ஆணையர் ரவி கூறுகையில், ‘‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக ஒரு பிரிவு இருக்கிறது. அதுமட்டுமின்றி தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் நாங்கள் தனியாக குழுக்கள் உருவாக்கியுள்ளோம்.
எங்கெல்லாம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடை பெறுகிறதோ, அங்கு சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு கல்லூரிகள், பள்ளிகள், பெண்கள் அதிகமாக கூடும் பகுதி களில் சிறப்பு ரோந்து வாகனங்கள் மூலம் பெண் காவலர்கள் ரோந்து செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தாம்பரம் மாநகர காவல் துறை எடுத்து வருகிறது என்று கூறினார்.
No comments:
Post a Comment