அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
சென்னை, மார்ச் 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (5.3.2022) நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் 2022-2023-ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் 2022-2023-ஆம் நிதி ஆண்டுக் கான நிதி நிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப் படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய் யப்படும். இந்த பட்ஜெட்டுகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தெழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அண்மையில் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து நிதி நிலை அறிக்கை தயாரிப்புப் பணி அந்தந்த துறை சார்பில் மேற்கெள்ளப்பட்டது.
கடந்தாண்டு போல இந்தாண்டும் காகிதமில்லா நிதி நிலை அறிக்கை மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாத முக்கிய திட்டங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று (5.3.2022) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதி, தெழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
இதில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தொகையை வழங்கு வதற்கான திட்டம் குறித்த அறிகுறிகூட இல்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், “முக்கிய திட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்“ என்று முதலமைச்சர் ஏற்கெனவே தெரிவித்தார். அந்த திட்டம் மகளிருக்கான உரிமைத் தெகை வழங்கும் திட்டம் வரும் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதனால் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment