கரந்தை தமிழ்ச் சங்கம் என்பது தமிழ்நாட்டில் வரலாறு படைத்த தமிழ்த் தொண்டறம் செய்யும் அமைப்பு.
தமிழ் அறிஞரும், சட்ட வல் லுநருமான உமாமகேசுவரனாரின் அரிய சிந்தனை செயலாக்கத்தில் "தமிழ்ப் பாசறை"யாக பல பெரும் புலவர்களை உருவாக்கிய அப் பட்டறையினைக் காத்து வந்தவர். 1983ஆம் ஆண்டு முதல் 1997 வரை அதன் தலைவராகவும், 2000ஆம் ஆண்டு முதல் 2021 வரை செயலாளராகவும் சீரிய பணியாற்றிய தமிழ்ச் செம்மல் அய்யா திரு.ச.இராமநாதன் (வயது 83) அவர்கள்.
எவரிடத்திலும் மரியாதை பொங்கும் பண்புடன், மாந்தநேயத்துடன் பழகிய பான்மையர். தொண்டின் தூய உருவம்.
எத்தனையோ சோதனைகள் அந்த அமைப்பிற்கு வந்த போதெல்லாம் அதனை எதிர்கொண்டு வெற்றி கண்டவர்; கரந்தை தமிழ்ச் சங்கத்தைக் கண்ணை இமைக் காப்பது போல் காத்த கருணையாளர் - காவலர்.
அதனை விரிவாக்கி - புலவர் கல்லூரியை - தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியாக உயர்த் தியவர்.
அவரது மறைவு (5.3.2022) அக்குடும்பத்திற்கும், கரந்தைப் புலவர் கல்லூரிக்கும் மட்டும் பேரிழப்பு அல்ல; தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஆகும்.
அவரது மறைவால் நாமும் மிகுந்த துயரமும் சோகமும் அடைகிறோம்; பலமுறை நம்முடன் கலந்து ஆலோசித்து செயல்பட்ட செம்மல்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கல்விக் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக.
அவருக்கு நமது வீரவணக்கம்.
சென்னை
6.3.2022
No comments:
Post a Comment