முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இமாலய அளவுக்கு உயர்ந்துள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இமாலய அளவுக்கு உயர்ந்துள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை, மார்ச் 6 தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகி யோருக்கு பிறகு தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் இருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் .வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலை வர் .வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தி யாளர்களிடம் பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஆங்காங்கே சில தவ றுகள் நடந்து இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டா லின் 4.3.2022 இல் வெளியிட்ட அறிக் கையும், இரண்டு மாவட்ட செயலாளர் கள் மீது எடுத்த நடவடிக்கையும் இந்திய அரசியலில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியது.

பல அரசியல் கட்சிகள், பல்வேறு அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கி மிகப்பெரிய கொள்கை கூட்டணியாக ஏற்படுத்தி உள்ளார். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல, தமிழ்நாடு  மக்களை மட்டுமல்ல இந்திய மக்களையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.

அரசியலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முன்னணியில் இருக் கிறார். இந்த நடவடிக்கையின் மூலம் அவரது பெருமையும், அவரின் பெயரும் இமாலய அளவில் உயர்ந்து நிற்கிறது.

மு..ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.

தமிழகத்தில், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு பிறகு தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் இருக்கிறார்.

மு..ஸ்டாலினின் இந்த நடவடிக்கை கட்சி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

முதலமைச்சரின் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன். தற்போது அதனையும் தாண்டி மிகுந்த மரியாதை வைத்திருக் கிறேன். மு..ஸ்டாலினை உளமார வாழ்த்துகிறேன். தி.மு..வில் இளைஞர் கள், பெண்களுக்கும் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அவர்களது செயல்பாட்டிலும் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் மு..ஸ்டாலின் உறுதியாக இருப்பார். எந்த தவறும் நடக்காது என்ற நம்பிக்கை யும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment