சென்னை புத்தகக் காட்சியில் சாதனை படைக்கும் "பெரியார்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

சென்னை புத்தகக் காட்சியில் சாதனை படைக்கும் "பெரியார்!"

 மாணவர்கள், இளைஞர்களின் பகுத்தறிவு சிந்தனைக்கு ஊக்கம் அளிக்கும்

தந்தைபெரியாரின் உரைகள், எழுத்தாக்கங்கள்


சென்னை, மார்ச் 6- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் தென்னிந் திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 45ஆவது சென்னை புத்தகக்காட்சியில் F-38 அரங்கில்  பெரியார் சுயமரியாதை பிரச் சார நிறுவனத்தின் புத்தகங்கள் அழகுற காட்சிப்படுத்தப்படுள்ளன. அரங்கின் முகப்பில் தந்தைபெரியார் முழு உரு வச்சிலை அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது. ஆர்வமுடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

குடிஅரசு இதழ்களில் சித்திரபுத்தி ரன் எனும் புனைப்பெயரில் தந்தை பெரியார் எழுதிய உரையாடல்களின் தொகுப்பு நூலாக  சித்திரபுத்திரன் கட்டுரைகள் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. உரையாடல் வடி வம் பெரிதும் மாணவர்களை, இளை ஞர்களின் கருத்தை கவரும்வகையில் உள்ளது.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகளாக, திரா விடர் கழக (இயக்க) வெளியீடுகளாக தந்தைபெரியாரின் உரைகள், எழுத்தாக் கங்கள் அனைத்தும் பல்வேறு தலைப்பு களில் தொகுக்கப்பட்டு வெளியிடப் பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரியார் களஞ்சியம்  தொகுதிகள், குடிஅரசு தொகுப்புகள், பெரியாரியல் பாடங்கள் தொகுதிகள், பெரியாரியல் பாகங்கள், Collected works of Periyar E.V.R., பொன்மொழிகள், இனி வரும் உலகம், இந்து மதப்பண்டிகைகள், இராமாய ணப் பாத்திரங்கள், மனுநீதி ஒரு குலத் துக்கொரு நீதி, வகுப்புவாரி உரிமை ஏன்?, சிந்தனையும் பகுத்தறிவும், அறிவு விருந்து, நீதி கெட்டது யாரால்?, புரட்சி, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள், ஜாதி ஒழிப்புப் புரட்சி, ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் தந்தைபெரியார் உரை கள், எழுத்துகளின் ஆக்கங்களாக புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அன்னை மணியம்மையாரின் நூல் களாக அன்னை மணியம்மையார்  களஞ்சியம், அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள், தொண்டறச் செம் மல் மணியம்மையார்100, அம்மா பேசு கிறார், கந்தபுராணமும் இராமாயண மும் ஒன்றே உள்ளிட்ட புத்தகங்களும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்களான கீதையின் மறு பக்கம் ஆய்வு நூல், யுனெஸ்கோ பார் வையில் தந்தைபெரியார், தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு-ஒரு பார்வை, பெரியா ரின் பெண்ணியப்புரட்சி, சமூக நீதி, வகுப்புரிமை வரலாறு, கிரீமிலேயர் கூடாது ஏன்?, பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழக முன்னோடிகள் தந்தைபெரியார், தந்தைபெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகள், சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும், நீட் தேர்வு அவலங்கள், நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?, புதிய கல்விக்கொள் கையா? நவீன குலக்கல்வித்திட்டமா?, புரிந்து கொள்ளுங்கள் சவார்க்கர்-காந்தியார்-கோட்சே-ஆர்.எஸ்.எஸ்., இதுதான் பகவத் கீதை, ஆத்மா ஓர் ஆராய்ச்சி, மதவெறியும் மாட்டுக்கறியும், பெரியார் ஓர் அறிவுக் கருவூலம், மகாபாரதத்தில் வர்ணதர்மமும் பெண் ணடிமையும், மாட்டுக்கறியும் மதவெறி அரசியலும், அம்பேத்கர் பற்றிய அருண் ஷோரியின் நூலுக்கு மறுப்பு, திராவிடர் கழகத்தில் மகளிர் சேரவேண்டும் - ஏன்?, பாஜகவும், இந்துத்துவாவும், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜான் குதிரை, இந்திய அரசியல் சட்டம் முதல் திருத் தம் ஏன்? எதற்காக?, நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?, பெரியார் மணியம்மை திருமணம் ஒரு வரலாற்று விளக்கம் விரிவாக்கப் பட்ட புதிய பதிப்பு உள்ளிட்ட ஏராள மான புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் .அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், கவிஞர் கலி.பூங்குன்றன், முதலமைச்சர் மு..ஸ்டா லின் உள்பட தலைவர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலரும் எழுதிய பகுத்தறிவு மணம் பரப்பும் புத்தகங்கள் பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவன வெளியீடுகளாக வெளியிடப் பட்டுள்ளன.

அழகுற அச்சிடப்பட்டு அத்துணை யும் மலிவுப்பதிப்புகளாக வெளியிடப் பட்டு தந்தைபெரியார் உலகமயமாகி வருகிறார். தந்தைபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகம் அவர்தம் தன்னலமற்ற மனித நேய தொண்டறப்பணிகளை தொடர்ந்து செயலாற்றி அவர்தம் கொள்கைகளை பரப்பிவருவதைக்கண்டு 45ஆவது  சென்னை புத்தகக்காட்சியில் வாசகப் பார்வையாளர்கள், அனைத்துக்கட்சியினர், கட்சிகளைக் கடந்து பாராட்டி வருகின்றனர்.

இன்றைய தலைமுறையான மாண வர்கள், இளைஞர்கள், மகளிர் என அனைத்து தரப்பினரிடமும் பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வை ஊட்டிடும் புத்தகங்கள் அள்ள அள்ளக் குறையாத கருத்துக் கருவூலங்களாக கிடைக்கின்றன.

45ஆவது சென்னை புத்தகக்காட்சி இன்று (6.3.2022) முடிவுற்றாலும், சென்னை பெரியார் திடலில், பெரியார் புத்தக நிலையத்தில் புத்தகங்கள் எந் நாளும் கிடைக்கின்றன.

இணைய வழியில் அமேசான், ஃபிளிப் கார்ட் மூலம், ஆப்பிள் ஆன்ட் ராய்டு கருவிகளில் கிண்டில் செயலி மூலம் மின்புத்தகங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

No comments:

Post a Comment