கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை, மார்ச் 5 கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் மிஷன் மூலமாக, அனைத்து ஊரக வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி ஊரக பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி ஒதுக்கி தமிழ்நாட்டில் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.771.73 கோடியும், ஒன்றிய அரசு சார்பில் ரூ.581.48 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment