சென்னை,மார்ச் 5- அரசு ஊழியர், ஆசிரியர்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடித சுருக்கம் வருமாறு: தமிழக முதலமைச்சருக்கு கலந்து கொண்ட 14ஆவது மாநில மாநாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, அவரிடம் வழங்கப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்துவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு அரசு நிறைவேற்ற உள்ள 2022-2023ஆம் ஆண்டு நிதி-நிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான தீர்வை ஏற்படுத்திதரும் நிதி நிலை அறிக்கையில் இருக்கும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் கொண்டு எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment