28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மய்ய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மய்ய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல்

சென்னை, மார்ச் 5 வங்கக் கடலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண்டல தலைவர்எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    காலநிலை மாற்றம் காரணமாக  பருவத்தே நடக்கக்கூடிய அனைத்தும் அண்மை காலமாக மாற்றமடைந்து வருகிறது. ஜனவரியிலும், பிப்ரவரியிலும் கனமழை பெய்கிறது. கடும்வறட்சி ஏற்படுகிறது. திடீர் வெள்ளம்ஏற்படுகிறது. ஓராண்டில் மழை பெய்யும் நாட்கள் குறைந்துவிட்டன. ஆனால் ஓராண்டில் பெய்ய வேண்டிய அளவு மழை குறுகிய நாட் களில் பெய்துவிடுகிறது.

    இவ்வாறு பருவம் தவறி மழை பெய்வது குறித்து இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், கூறும்போது,

    மார்ச் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவது அரிதானது தான். இதுவரை 1938, 1994 ஆகிய இரு ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் ஏற்பட்டுள்ளன. இவைஇரண்டும் தமிழக கரையை நோக்கிநகர்ந்து கரையை வந்தடைவதற்குள் வலுவிழந்துவிட்டன. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யுள்ளது என்றார்

No comments:

Post a Comment