சென்னை, மார்ச் 7 மக்கள் நல் வாழ்வுத்துறை நேற்று (6.3.2022) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் நேற்று 196 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து கரோனாவிற்கு 2,770 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். நேற்று கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 554 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண் ணிக்கை 34,10,228 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 62 பேர், கோவை 25 பேர், செங்கல்பட்டு 20 பேருக்கும் தொற்று உறுதியானது. அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாத புரம், ராணிபேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட் டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.
No comments:
Post a Comment