உக்ரைனில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீட்பு தமிழ்நாடு அரசுக்கு நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

உக்ரைனில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீட்பு தமிழ்நாடு அரசுக்கு நன்றி

புதுடில்லி, மார்ச் 7- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ் நாடு மாணவர்களை  மீட்ப தற்கான நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப் பினர் திருச்சி சிவா தலை மையில் 5.3.2022 அன்று புதுடில்லியில்  ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை  சந்தித்து தமிழ்நாட்டு மக்களை தாயகம் கொண்டு வருவதற் கான அனைத்து நடவடிக்கை களையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். 

    குழுவில் இடம் பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கலாநிதிவீராசாமி, எம். எம். அப்துல்லா, தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மேலாண்மை இயக் குநர் ஏ.கே.கமல் கிஷோர், இணை மேலாண்மை இயக் குநர் அஜய் யாதவ், மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் ஆகி யோர் உடன்இருந்தனர்.

    இக்குழுவினர், நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப் பினர் திருச்சி சிவா தலை மையில் புதுடில்லியில் முகா மிட்டு மாணவர்களின் மீட்பு பணியை கண்காணிக்கும் பொருட்டு நேற்று (6.3.2022)தமிழ்நாடு இல்லத்தில் ஆலோ சனை கூட்டம் நடத்தினர்.

    உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனுக் குடன் தமிழ்நாட்டிற்கு தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. மேலும், புதுடில்லி வரும் மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கி தேவையான அனைத்து வசதிகளும் செய்யப் பட்டது. இதுவரை உக்ரைனிலி ருந்து டில்லி வந்தடைந்த 1,011 மாணவர்களில் 852 மாண வர்கள்  (தனி விமானத்தில் 180 மாணவர்கள் உட்பட) தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

    மேலும், 159 மாண வர்களுக்கு விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டுள்ள மாணவர்களை சிறப்பு குழுவினர் நேரில் சந் தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். தமிழ்நாடு செல்ல அனைத்து ஏற்பாடு களையும் செய்து தந்த தமிழ் நாடு முதலமைச்சர் அவர் களுக்கு மாணவர்கள் நெகிழ்ச் சியுடன் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment