மும்பை, மார்ச் 4 மராட்டிய முதல மைச்சர் உத்தவ் தாக்கரே, நாங்கள் 25 ஆண்டுகளாக ஒரு பாம்புக்கு பால் வார்த்தோம் என பா.ஜ.க.வை இலக்காக கொண்டு பேசியுள்ளார்.
மராட்டியத்தின் மும்பை நகரில் மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நடந்த மகா விகாஸ் அகாடி கூட்டு கூட்டத்தில் சட்டமன்ற உறுப் பினர்கள் மற்றும் அதன் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவசேனா சார்பில் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தேசியவாத காங் கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், சிவசேனாவின் மேனாள் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வை விமர்சிக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, நாங்கள் 25 ஆண்டுகளாக ஒரு பாம்புக்கு பால் வார்த்தோம். அந்த பாம்பு தற்போது எங்களை நோக்கி சீறுகிறது என்று பேசியுள்ளார்.
எங்களை நோக்கி குறை சொல்ப வர்கள் யாரையும் எதிர்கொண்டு பதி லளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய பவார், என்னு டைய அரசியல் வாழ்வில் ஒருபோதும், எப்போதும் இதுபோன்ற ஒரு பழி வாங்கும் ஒன்றிய அரசை கண்டது இல்லை என்று பேசியுள்ளார். அவர், பண மோசடி வழக்கு ஒன்றில் மராட் டிய அமைச்சர் நவாப் மாலிக் கைது நடவடிக்கையை குறிப்பிட்டு பேசியுள் ளார்.
No comments:
Post a Comment