கீழடியில் 2 சில்லு வட்டுகள் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

கீழடியில் 2 சில்லு வட்டுகள் கண்டெடுப்பு

சிவகங்கை, மார்ச் 6 கீழடி அகழாய்வில் 2 சுடுமண்ணா லான சில்லு வட்டுகள் கண் டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட் டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் கடந்த பிப்.11ஆம் தேதி முதல் 8ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே பாசிம ணிகள், யானை தந்தத்தால் ஆன பகடை போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சுடுமண்ணால் ஆன 2 சில்லு வட்டுகள் கண்டறியப் பட்டுள்ளன.

இந்த சில்லு வட்டுகளை முற்காலத்தில் பெண்கள், சிறுவர்கள் விளையாடுவ தற்காக பயன்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment