பெத்தநாயக்கன் பாளையத்தில் திராவிட மாணவர் கழக கிளைக் கழகம் தொடங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

பெத்தநாயக்கன் பாளையத்தில் திராவிட மாணவர் கழக கிளைக் கழகம் தொடங்கப்பட்டது

ஆத்தூர் மாவட்டம் பெத்தநாயக்கன்  பாளையத்தில்  03.03.2022 அன்று மாலை 5.30 மணிக்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன்  தலைமையில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களைத் திராவிட மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். புதிய கிளை கழக திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர். நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மிக சிறப்பாக மாணவர்களை ஒருங்கிணைத்து மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆத்தூர் சுரேஸ் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல் ஆகிய இருவருக்கும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார்.

No comments:

Post a Comment