தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும்

 தாம்பரம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தாம்பரம், மார்ச் 6- தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கலந்துரை யாடல்  கூட்டம் மாநில துணைத் தலைவர் .கரி காலன் தலைமையில் 27.2.2022 அன்று காலை 11.30  மணியளவில் நடைபெற்றது.

தாம்பரம் மாவட்ட  தலைவர் .முத்தையன் வரவேற்புரை ஆற்றி னார்.

மாவட்ட  செயலாளர் கோ.நாத் திகன், மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, செங்கல் பட்டு மாவட்ட  தலைவர் சுந்தரம், தி.இர.சிவசாமி, ஆசிரியர் .சிவ குமார், கே.எம்.சிகாமணி, தோழர் உத்ரா, தாம்பரம் கலையரசி,  மாடம்பாக்கம் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து  தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள் நியமனம் நடைபெற்றது.

அதில் மாவட்ட தலைவராக மணிமங்கலம் சத்தி, மாவட்ட செயலாளராக குரோம்பேட்டை இராசேந்திரன், மாவட்ட துணைத் தலைவராக சிவகங்கை மா.சந்திரன், மாவட்ட துணைச் செயலாளராக குரோம்பேட்டை .மதிவாணன், மாவட்ட அமைப்பாளராக உத்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.கர்நாடகா மாநிலத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் "மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் " கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

2.அதிகமாக "மாடர்ன் ரேஷன லிஸ்ட்" பத்திரிகை சந்தா சேர்த்து தருவது.

3. "உண்மை,விடுதலை மற்றும் பெரியார் பிஞ்சு" ஆகியவைகளின் சந்தாக்களை சேர்ப்பது.

4.செஞ்சி பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு பெருந்திரளாக செல்வது மற்றும் மாநாட்டிற்கு நன்கொடை திரட்டி உதவுவது.

5.இந்திய ஒன்றியரசு தமிழ் நாட்டிற்கு தர வேண்டிய நிதி மற்றும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

6.தாம்பரம் பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நிலைய மேம்பாட்டிற்கு உதவுவது என்று ஆறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

 மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் .வெங்க டேசன் சிறப்புரை ஆற்றினார்.

அவரைத் தொடர்ந்து தோழர்.அய்ஸ்வர்யா, மறைமலை நகர் .பன்னீர்செல்வம், தீனதயாளன், ராம்மோகன், .குமரவேல், எம்.சீனி வாசன்,கரைமா நகர் .கண்ணதாசன், தே.சுரேஷ், குரோம்பேட்டை தமிழ்குடிமகன், தாம்பரம் சு.மோகன் ராஜ், மா.குணசேகரன், எஸ்.ஆர்.வெங்கடேஷ் மற்றும் ஒரத்தநாடு இரா.அரவிந்த் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்து கொண்ட தோழர்கள் அனை வரும் கருத்துரை வழங்கினர் தொடர்ந்து மதிய உணவுடன் கலந்துரையாடல் முடிவு பெற்றது.

No comments:

Post a Comment