தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் 3 திட்டங்களில் ரூ.3,500 கோடி முதலீடு 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் 3 திட்டங்களில் ரூ.3,500 கோடி முதலீடு 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை, மார்ச் 29 - தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாடு மற்றும் அய்க்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டுக்கு முதலீடு களை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, துபாய் பயணத்தினை முடித்துக் கொண்டு, அபுதாபிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-.3.-2022 அன்று (நேற்று) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அய்க்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த அபு தாபியில் உள்ள முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலசில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்தார்.

முபாதாலா நிறுவனம்

முபாதாலா நிறுவனத்தின் உட்கட் டமைப்பு நிர்வாக இயக்குநர் சையத் அராருடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டில், மிகப்பெரும் உள்கட் டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே, முபா தாலா நிறுவனம், பிரின்ஸ்டன் டிஜிட் டல் என்ற நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடுகள் மேற் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் நிறுவனங்களுக்கிடையே ஒரு பணிக் குழுவை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட் டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனடியாக துவங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணி யாளர்களுக்கான விடுதிகள் மற்றும் தகவல் தரவு மய்யங்கள் போன்ற மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முபாதாலா நிறுவனத் திற்கு அழைப்பு விடுத்தார். 

அபுதாபி வர்த்தக சபை தலைவரும், அய்க்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தகக் கூட்ட மைப்பு தலைவருமான எச்.இ.அப் துல்லா முகமது அல் மஸ்ரோயீ உட னான சந்திப்பின்போது, அபுதாபி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிர்பதனக் கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள், வணிகத்தீர்வை திட்டங்கள் போன்றவற்றில் முதலீடுகள் மேற் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருள்களை அய்க் கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா நாடு களுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அழைப்பு

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்கள், தடையில்லா வர்த்தக மண்டலங்கள், கிடங்குகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களில் முதலீடு செய்திடலாம் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஓசூர் போன்ற நகரங்களில் தொழில், சேவை மற்றும் சில்லரை வணிகங்கள் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகம் உள்ளது என்றும், எனவே, இத் துறைகளில் முதலீடுகள் மேற்கொள் ளுமாறும், அபுதாபி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

ஏ.டி.கியூ. நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி, எச்.இ.முகம்மது அல் சுவைதி உடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ கத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில், முதலீடுகள் மேற் கொள்ளுமாறு, இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மேற்கொண்ட சந்திப்புகளை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யூசுப் அலியை அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், ரூ.3,500 கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதில், ரூ.2,500 கோடி முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ரூ.1,000 கோடி முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment