கபில்சிபல்
வணிகம் செய்வது லாபத்துக்காகத்தான். கட்டமைக் கப்பட ஒரு மதமும் லாபத்திற்கான ஒரு தொழிலாக ஆகி விட்டது. இத்தகைய மதமும் அரசியல் செயல்திட்டமும் ஒன்றுக் கொன்று உதவி செய்து கொள்ளுவதே அதன் காரணம். மதத்தின் அரசியலுடன் அரசியலின் மதம் அடை யாளப்படுத்தும் ஓர் உறவு முறை கொண்டி ருக்கும்போது அரசியலின் மதம் செழித்து வளர்கிறது.
மத அரசியலின் நோக்கமே தனது காலடித்தடத்தை பெருக்குவதுதான். அதற்காக நீதிநெறி போதனை மூலம் அதனைச் செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கு மாறாக மக்களின் இழிந்த அடிப்படை உணர்வு களை, குறிப்பாக ஒருவரது மத நம்பிக்கைக்கு அச் சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படும்போது, கவர்ந்தால் மட்டுமே போதுமானதாகும். உண்மை நிலையில் இருந்து விலக்கப்பட்ட காரணங்களால், அந்த மதத்தின் வாக்காளர்களை அதற்கு இரையாகச் செய்து விடுகிறது. அத்தகைய உணர்வு ரீதியிலான வேண்டு கோள்கள் மக்களை, பாது காப்பு அற்றவர்களாகவும் பிரச்சாரத்துக்கு அடிமையானவர் களாகவும் ஆக்கி விடுகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக அரசியலின் மதம் இந்த பரப்புரையை ஆதரிக்கிறது. ஜாதி மற்றும் இதர வரிசைகளில் ஒரு குறிப்பிட்ட இன சமூகத் தினரை ஒன்று படுத்த அது உதவுகிறது, அது போன்ற அடையாள ரீதியிலான எந்த வித ஆதாயத்தையும் சிறுபான்மை மத சமூகத்தை சேர்ந்தவர்களால் எடுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய ஊகிக்கப்பட்ட அச்சுறுத்தல் களிலிருந்து தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் முடியாது. அந்த மதத்தின் செயல்திட்டங்களைக் கொண்டு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அம்மத மக்களின் இழிந்த உணர்வுகளுக்கு தீயிட்டு எரியச் செய்வதன் மூலம் மிக அதிக அளவில் ஆதாயம் பெறுவதற்கு நன்கு கட்டமைக் கப்பட்ட மத பெரும்பான்மையினரால் முடியும். அதன் பின் ஆட்சி அதிகார அமைப்புகளில் இடம் பெறும் அவர்கள் தேசிய செயல் திட்டங்களை கட்டமைக்கத் தொடங்கி விடுகிறார்கள். அத்தகைய அவர்களது ஒட்டுண்ணி உறவுமுறை ஜனநாயக கட்டமைப்புகளை சீரழிக்க இயன்றதாக ஆகிவிடுகிறது.
நன்கு கட்டமைக்கப்பட்ட மத பெரும்பான்மை யினரின் அரசியல் நீரோட்டம் 1947இல் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே தோன்றத் தொடங்கிவிட்டது. நம் நாட்டின் விடுதலைப் போராட்ட இயக்கத்தை தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு அவர்கள் பெரிதும் முயன்றனர். நாடு விடுதலை பெற்றபிறகு, காந்தியாரின் 1948ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த மதவாத சக்திகளுக்கு பெரும் பின்னடைவு நேர்ந்தது. வன்முறை செயல்களைச் செய்ய மக்களைத் தூண்டிய குற்றத் துக்காகவும், வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட குற்றத் துக்காகவும், ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு அதன்பின் தடை செய்யப்பட்டது. 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விதிக்கப்பட்ட இந்தத் தடை 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விலக்கிக் கொள் ளப்பட்டது. 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்ட பாரதிய ஜன சங்கம் என்ற அமைப்பு இந்து வலதுசாரி ஆதரவாளர்களின் கொள்கை களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு அளித்தது. என்றாலும் இந்த அமைப்பு பெரும் அளவிலான தேர்தல் வெற்றிகள் எதனையும் பெறவில்லை. 1984ஆம் ஆண்டு அக் டோபர் மாதத்தில் இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டபிறகு மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது பா.ஜன சங் அமைப்பு புதியதாக துவக்கப்பட்ட பா.ஜ. கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது. மக்களவையில் பா.ஜ.க. வெறும் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது. அதன் பிறகுதான், பெரும்பான்மை மக்களின் மதமான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் புனிதமற்ற கூட்டணி அரசியலுக்கான புதிய விதைகள் விதைக்கப்பட்டன. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை பற்றி இந்து மக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி 1990ஆம் ஆண்டில் ரத யாத்திரை ஒன்று மேற்கொண்டது இதற்கு வழிவகுத்தது. இது மிகவும் அதிசயிக்கத் தக்க அளவிலான தேர்தல் வெற்றி ஒன்றை பா.ஜ.கட்சிக்கு அளித்தது.
ரத்தத்தை சுவைத்து பிறகு, பா.ஜ.க. தலைமையிலான இந்திய ஒன்றிய ஆட்சியில் அரசும் மதமும் ஒரு மாதிரியாக கலங்கலாகத் தோன்றுவதாக ஆகிவிட்டன. நரேந்திர மோடி ஒன்றிய அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு, பெரும் பான்மையினரின் மதமான இந்து மதத்தின் செயல் திட்டங்களை சற்றும் வெட்கமே இல்லாமல் அரசு பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. அதற்கேற்றவாறு அத்தகைய செயல் திட்டங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான பல செயல்திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்கி வைத்தது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் பிரச்சினையை விட மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்களும் கூட முன்னுரிமை அளிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல் துறையினைப் பற்றி சிறிதும் அச்சமில்லாமல் மக்களை வெட்டிக் கொலை செய்யும் கலவர கும்பல்கள் எந்த விதத் தடையும் இல்லாமல் சுதந்திரமாக தாங்கள் விரும்பிய வர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துக் கொண்டு சென்றனர். இத்தகைய படுகொலை செய்யும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமலும் அதைத் தடுக்கா மலும் காவல்துறை மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக சில நேரங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மீதே வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் வன்முறைப் பேச்சுக் களையும், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் அகில பாரதிய வித்திய பரீசத், பஜ்ரங்தள் மற்றும் அவற்றை போன்ற காவியுடை அமைப்புகள் பேசிக் கொண்டும் செய்து கொண்டிருந்தன. அரசிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவை கொண்டிருந்தன. வெளிப்படையான வன் முறைச் செயல்களை செய்வதற்காக சிறுபான்மை மத மக்களை தூண்டிவிடுவது முதற்கொண்டு குற்றமிழைத்த வர்கள்மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு தயங்கும் அரசு ஒரு பக்கத்தில் இருக்க தங்களது குற்றச்செயல்களுக்கு எந்தவித தண்டனையுமின்றி தப்பி விடுவோம் என்று இந்த வன்முறையாளர்கள் நம்பியி ருந்தனர்.
பா.ஜ.க.வின் தலைமைகூட சிறுபான்மை மத சமூகத் தினரை கோபமும் வருத்தமும் அடையச் செய்ய இயன்ற சொற்களால் அவர்களை வசைபாடிக் கொண்டி ருந்தது. “அப்பா ஜான்”, “சம்ஷான்”, “கப்ரிஸ்தான்”, “கோலி மாரோ” ஆகிய இந்த சொல் அம்புகள் எல்லாம் பொது மேடைகளில் அவர்கள் பிரச்சாரம் செய்யும்போது பயன்படுத்தும் சொற்றொடர்களாகும்.
மக்களையும் சூழ்நிலைகளையும் அறிந்து மதிப்பீடு செய்வதற்கான ஆற்றல் மிகுந்த தொழில்நுட்ப வல்லு நர்கள் மற்றும் பக்தர்களுக்கு நிதி உதவி அளித்து, நாட்டில் உள்ள முதன்மையான மற்றும் சமூக ஊட கங்களில் பிரச்சாரம் செய்வதற்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புகள், சூழ்நிலையையே சீரழிக்க இயன்ற, மக்களை பிளவுபடுத்தும் அறிக்கைகளுக்கு விரைந்து செயல்படுவதற்கான உதவி செய்யும் சக்தியாக செயல் படுகின்றன. இதன் நோக்கம் மதநம்பிக்கை விவகாரங் களை மதவெறி கொண்டவையாக மாற்றுவதுதான்.
தங்களது மத பிரச்சாரத்தில் பெரும் ஆற்றலுடன் ஈடுபட்டு வெற்றி பெற்றபிறகு, அரசின் ஆணையையும், விருப்பத்தையும் நிறைவேற்ற இயன்ற அரசு அதி காரிகளை மிக முக்கியமான பதவிகளில் நியமிப்பதன் மூலம், மக்களைப் பிளவுபடுத்தும் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மோடி அரசு உதவியது. அத்தகைய மிக முக்கியமான அரசமைப்பு சட்டப் படியான பதவிகள், அதன் செயல்திட்டங்களை நிறை வேற்றுவதற்கு ஒப்புக் கொண்டவர்களுக்கும், தங்களைப் போன்ற மனம் கொண்டவர்களுக்கும் அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டன. தனது மிக முக்கியமான செயல்திட்டம் இன்னமும் செயல்முறைப்படுத்தப் படாமல் உள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது செயல் திட்டங்களை செயல்படுத்த இயன்ற ஓரிடத்தைக் கண்டு கொண்டது. அதன்படி இந்துத்துவ செயல் திட்டம் மெல்ல மெல்ல, ஆனால் மிகமிக நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தங்களது அரசியல் முன்னுரிமைகளை எதிரொலிக்கும் வகையில் பள்ளிப் பாட நூல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு, நாட்டின் கடந்த கால தலைவர்கள் மற்றும் கதாநாயகர்களின் பெயர்கள் குழிதோண்டி புதைக்கப்படுவதுடன், வரலாற்று உண்மைகளுக்கு புதுப்புது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று நினைவுச் சின்னங்களுக் கெல்லாம், நவீன சாயம் பூசப்படுவதுடன் அவற்றின் பாரம்பரியப் பெருமைகளை மறைப்பது அல்லது நீக்குவது என்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆதிக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு கொண்ட ஒரு கலாச்சாரம் தோன்றி எழுச்சிபெற அது உதவியது. நற்பண்புகளின் உருவமாகத் திகழும் ஒரு தேசிய உணர்வுக்கு இந்த கலாச்சாரம் தீனிபோடுகிறது. குடிமக்கள் அனைவரும் அடங்கி ஒடுங்கி கீழ்ப்படிவதை வலியுறுத்தும் பெரும்பான்மை மத மக்களின் கலாச்சார செயல்திட்டத்தின் அனைத் துக் கூறுகளையும் உள்ள டக்கிய தேசியம் இது.
இந்தப் பரப்புரையில் இருந்து உருவாவதுதான் ‘நாமும் எதிராக அவர்களும்‘ என்ற கோட்பாடு, ஆழ்ந்த பலமான தேசிய உணர்வுக்கு அது தீனிபோடுகிறது. இதனால் பெறப்படும் முடிவு யாதெனின், பெரும்பான்மை மக்களின் கலாச் சாரத்தை பலப்படுத்துவது ஒன்றுதான் தேசத்தை பலமானதாக ஆக்குவதற்கான வழி என்ற கோட் பாடு மிகமிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. வன்முறைப் பேச்சும் சில நேரங்களில் வன்முறைச் செயல்களும், நாட்டின் ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் தேவைப்படும் இன்றியமையாத, நியாயமான கருவி களாக ஆகிவிடுகிறது. கருத்து மாறுபடுபவர்கள் பற்றி அவர்கள் கூறுவது, முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள் என்பதுதான். கேள்விகள் கேட்பது, பதில் கூறப்படுவதை வலியுறுத்தி அமைதியாகப் போராடுவது ஆகியவை தேசவிரோதச் செயல்களாகவே பார்க்கப்படுகின்றன.
நன்கு கட்டமைக்கப்பட்ட மதம் அரசுடன் ஒன்றி ணைந்து செயல்படும் போது, ஒரு சிலரின் கைகளிலேயே அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும் விளைவு ஏற்படுகிறது. மதம் மற்றும் அரசின் ஆதரவு பெற்றிருக்கும் ஒரு சிலருக்கு, எவருமே கேள்வி கேட்கமுடியாதபடி கையூட்டும், வெகுமதிகளும் பகிர்ந்தளிப்பது இன்று நடைமுறையில் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. பெரும்பான்மை மத மக்களின் மதப்பேரறிவின் தொகுப் பாகவும் பிரதிநிதிகளாகவும் அவர்கள் பார்க்கப்படு கின்றனர்.
இவ்வாறு அரசு அதிகாரமும் நாட்டின் செல்வமும் ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்க அனுமதிப்பது என்பதை நாம் பார்க்கும்போது, சர்வாதிகார கட்டமைப்புகள் தோற்றம் பெறுவதை நாம் பார்க்கிறோம். பலமாகக் கட்டமைக்கப்பட்ட மதம் - மதத்தின் மதிப்பீடு களுக்கு சற்றும் மரியாதை தருவது இல்லை. அதிகாரத்தின் மூலம் கிடைக்கும் சொத்து சுகங்களையும் அது அனுப விக்கிறது.
அரசும் மத போதகர்களும் ஒன்றிணைந்து செயல் படும் போது, அது வன்முறை விளைவுகளுக்கு வழி வகுக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது. நிலப்பரப்பு மற்றும் செல்வத்தின் மீது அரசு கொண்டிருக்கும் தீராத பசியும் தனது காலடித் தடத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற மதத்தின் தணியாத பேராசையும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படு வதைத்தான் இப் போது நாம் பார்க்கிறோம்.
நன்றி: ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ - 17.2.2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment