இளநிலைப் பட்டத்திற்கும் பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வா? திருவாரூரில் (31.3.2022) நடக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

இளநிலைப் பட்டத்திற்கும் பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வா? திருவாரூரில் (31.3.2022) நடக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

1) தந்தை பெரியார் வாழ்க!

2) அன்னை மணியம்மையார் வாழ்க!

3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்க!

4) ஒன்றிய அரசே பா.ஜ.க. அரசே

கல்வித்துறையை அழிக்காதே!

5) புகுத்தாதே புகுத்தாதே!

தேசிய கல்விக் கொள்கையை புகுத்தாதே!

6) திணிக்காதே! திணிக்காதே!

மத்தியப் பல்கலைக்கழகங்களில்

நுழைவுத் தேர்வைத் திணிக்காதே!

7) மதிப்பில்லையா? மதிப்பில்லையா?

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு

மதிப்பில்லையா? மதிப்பில்லையா?

பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து எடுத்த

மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லையா?

8) அழிக்காதே அழிக்காதே

பள்ளிக் கல்வியை அழிக்காதே!

9) கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா?

10) ஒடுக்கப்பட்டோர் உயர்வைத் தடுக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

11) ஏழை எளியோர் கல்வியைப் பறிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

12) பள்ளிக்கல்வி முறையை அழிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

13) மாநிலப் பாடத்திட்டங்களை ஒழிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

14) மாநில அரசின் உரிமையைப் பறிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

15) கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

சமூகநீதியைச் சாய்த்து முடிக்க

நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா? 

16) அனுமதியோம் அனுமதியோம்

நுழைவுத் தேர்வுகளை அனுமதியோம்!

17) மேற்படிப்புக்கு  GATE அய்ப் போட்டான்

IIT க்கு  JEE ன்னான்

மருத் துவத்துக்கும் NEET அய்ப் போட்டான்

மிச்சமிருக்கும் படிப்புக்கெல்லாம்

CUET ன்னு தடையைப் போட்டா

மாணவர் நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து

உடைத்து எறிவோம் தடைகள் அனைத்தையும்!

 18) உரிமைப் பறிப்பு உரிமைப் பறிப்பு

பல்கலைக்கழகங்களின் உரிமைப் பறிப்பு

19) மாநிலப் பல்கலைக்கழகங்களின்

முனைவர் பட்ட மாணவரைக்கூட

டில்லிதான் தேர்வு செய்யுமா?

ஏற்க மாட்டோம். ஏற்க மாட்டோம்!

அதிகாரத் திணிப்பை ஏற்க மாட்டோம்!

20) போராடுவோம் வெற்றி பெறுவோம்

வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

- திராவிடர் மாணவர் கழகம்


No comments:

Post a Comment