மேற்கு வங்க சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கைகலப்பு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பா.ஜ.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

மேற்கு வங்க சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கைகலப்பு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பா.ஜ.க. உறுப்பினர்கள் இடைநீக்கம்

கொல்கத்தா,மார்ச் 29- பிர்பும் கலவரம் தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கு இடையே மோதல் ஏற் பட்டது. இதில் சட்டமன்ற உறுப் பினர்கள் பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. பேரவைக் கூட்டம் தொடங்கியதும், பாஜக உறுப்பினர்கள், பிர்பும் அருகே போக்டுய் கிராமத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட  நிகழ்வு தொடர்பாக குரல் எழுப்பி அமளி யில் ஈடுபட்டனர். அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், உள்துறையை வைத்திருக்கும் மாநில முதலமைச்சர் மம்தா  பதவி விலகவேண்டும் என்று கோரினர்.

இதனைத் தொடர்ந்து,  பேரவைத் தலைவர் பிமன்   எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர்களின் இருக்கையில் அமரு மாறு பல முறை கேட்டுக் கொண் டார். அதனைப் பொருட்படுத்தாத பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில். அரைமணிநேரம் கழித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள், எதிர்க் கட்சி உறுப்பினர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறு கையில், "பேரவைக்குள் வைத்து பாஜக உறுப்பினர்கள் தாக்கப்பட் டனர். இதில் பாஜக தலைமைக் கொறடா மனோஜ் திக்கா, சட்ட மன்ற உறுப்பினர் நரஹரி மஹதோ உள்ளிட்ட பல தலைவர்கள் காய மடைந்தனர். சந்தனா பவுரி முத லான பெண் சட்டமன்ற உறுப்பி னர்களும் தாக் கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

அதேவேளையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட் டப்பேரவையின் பெண் பாது காப்பு அதிகாரிகளை தாக்கியதாக வும், அதிகாரபூர்வ ஆவணங்களைச் சேதப்படுத்தியதாகவும் திரிணா முல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள் ளது. இந்த கைகலப்பில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசித் மஜூம் தாரிக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் எஸ்எஸ்கேஎம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். இந்தக் அவைக் கலவ ரத்தைத் தொடர்ந்து பாஜக உறுப் பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, தீபக் பர்மன், ஷங்கர் கோஷ். மனோஜ் திக்கா, நரஹரி மஹதோ ஆகிய 5 பாஜக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். கடந்த வாரத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத்தலைவர் ஒருவர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட் டதைத் தொடர்ந்து, அந்தக் கிரா மத்தில் கலவரம் மூண்டு வீடுகளுக்கு தீவைக் கப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் கொல் லப்பட்டனர். இந்தக் கலவரம் குறித்து சிபிஅய் விசாரணைக்கு கொல் கத்தா உயர் நீதிமன் றம்  உத்தர விட்டுள் ளது.

No comments:

Post a Comment