குரூப்- 4 தேர்வு: இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

குரூப்- 4 தேர்வு: இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

நெல்லை, மார்ச் 4  குரூப்- 4 தேர்வுக்கு திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என பாலச்சந்திரன் தெரிவித்தார். 

    நெல்லை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

    ஓஎம்ஆர் சீட் மூலம் தேர்வு எழுதுவதால் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனிவரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் எந்த முறைகேடுகளும்  நடைபெறாத வகையில் தடுக்கப்படும். 

    அதே போல் குரூப் - 4 தேர்வுக்கு திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும்.

    ஓஎம்ஆர் மற்றும் ஆதார் இணைப்புக்கான காலம் முடிவு அடைந்துவிட்டது.மீண்டும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment