சென்னை, மார்ச் 30 7- ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதற்கு இன்று (புதன்கிழமை) முதல் விண் ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
குரூப்-4 பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கா.பாலச்சந்திரன், சென்னை பாரி முனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று (29.3.2022) வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளாக குரூப்-4 பதவி களுக்கான தேர்வு நடத்தப்பட வில்லை. அதன் பிறகு, தற்போது தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி, 274 கிராம நிர்வாக அலுவலர், 3 ஆயிரத்து 681 ஜூனியர் அசிஸ்டெண்ட், 50 பில் கலெக்டர், 2 ஆயிரத்து 108 தட்டச்சர், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சர், ஒரு ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் 163 ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 301 இடங்களுக்கு போட்டி தேர்வு நடக்க இருக்கிறது. இதுதவிர 81 இடங்கள் விளையாட்டு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்கள் கலந் தாய்வுக்கு முன்பு வரை மேலும் உயர்த்தப்படவும் வாய்ப்பு இருக் கிறது. இதற்கு 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு 30ஆம் தேதி (இன்று) முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ஆம் தேதி ஆகும்.
ஜூலை மாதம் தேர்வு
தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் 3 மணி நேரம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக் கிறது. 200 வினாக்களில் முதல் 100 வினாக்கள் தமிழ் வழி கட்டாய தேர்ச்சி வினாக்களாக கேட் கப்படும்.
அதில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மொத்த தேர்வு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும். அவற்றில் 90 மதிப்பெண்கள் பெற்றால் தகுதி யுடையவராக கருதப்படுவார்கள். தேர்வு முடிவு அக்டோபர் மாதத்திலும், கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் மாதத்திலும் நடத்தப்படும்.
கடந்த முறை நடந்த குரூப்-4 தேர்வு போல எந்த தவறும் நடக்காதபடி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
முன்பு தேர்வர்கள் தேர்வு மய்யத்தை தேர்வு செய் வார்கள். இப்போது டி.என். பி.எஸ்.சி.தான் தேர்வு மய்யத்தை தேர்வு செய்
கிறது. ஓ.எம்.ஆர். விடைத்தாளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.

No comments:
Post a Comment