போக்குவரத்துத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

போக்குவரத்துத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன் மாற்றம்

சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு அமைச்சர்கள் இலாகாவில் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பனுக்கு பிற்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார். 

கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.

அந்த அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.

அமைச்சரவையில் மாற்றம்

இந்தநிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் 2 பேரின் இலாகா திடீரென மாற்றி அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண் ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவ சங்கர் போக்குவரத்து அமைச் சராகவும் மாற்றப்பட்டனர்.

ஆளுநர் அறிவிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அலுவலகமான  ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில், போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக் கூர்திகள் சட்டம் ஆகிய துறைகளை நிர்வகித்து வந்த அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப் பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட் டோர் நலன், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், ஆர்.எஸ்.ராஜ கண் ணப்பன் வகித்து வந்த போக்கு வரத்துத் துறையின் அமைச்சராக மாற்றப்பட்டார்.

எனவே ஆர்.எஸ்.ராஜ கண் ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்றும், எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்றும் அழைக்கப் படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment