சென்னை, மார்ச். 30- சென்னையில் தலைமையகத் தைக் கொண்டு நாடெங்கிலும், தேசிய அளவில் பல்வேறு மாற்று திறனாளிகள் நலனுக்காக பணியாற்றி வருகிற எபிலிட்டி ஃபவுண்டேஷன் தனது 20ஆவது ஆண்டு கவின்கேர் எபிலிட்டி விருதுகளை வழங்கியுள்ளது.
முதுகெலும்பு தசைச்சிதைவு மற்றும் தசைநார் தேய்வு பாதிப்புள்ள நபர்கள் சமூகத்தில் தீவிர செயல்பாடுள்ள பங்கேற்பாளர்களாக ஆவதற்கு அவர்களுக்கு திறனதிகாரம் பெறச் செய்யும் பல்வேறு செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற கேரளா கொல்லத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு 14 ஆண்டுகளாக சிறப்புக் கல்வியாளராக செயலாற்றி வரும் மகாராட்டிரா சோலாப்பூரைச் சேர்ந்த வித்யசிறீ அன்குஷ், மாற்று திறனாளிகளுக்கான பாரா பேட் மிட்டன் வீராங்கனையாக 30 பதக்கங்களை பெற்றுள்ள குஜராத் அகமதாபாத்தைச் சேர்ந்த மனாசி ஜோசி.
பன்னாட்டு அரங்குகளில் பார்வையற்ற காது கேட்காத நபர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடி வருபவரான சுருத்தி லதா ஆகியோருக்கு இவ்விருதை கவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன், எபிலிட்டி அறக்கட்டளை நிறுவன் ஜெயசிறீ ரவீந்திரன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment