லண்டன், மார்ச் 5- உக்ரைன்-ரசியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் ரசியா படை கள் தொடர்ந்து கடும் தாக்குதலை நடத்தி வருகி றது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டடங்கள், பல் கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங் களை குறி வைத்து தாக் குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளி யேறி உள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப் பற்ற ரசியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அங்கிருக்கும் இந்தி யர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.
முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ரசியா தீவிரப்படுத்தி உள் ளது. நூற்றுக்கணக்கான தாய்மார்கள் போர் மண் டலத்திலிருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்று உள்ளனர்.
ரசியாவின் உக்கிர தாக்குதலில் நகரம் முழு வதும் திரும்பும் திசை யெல்லாம் நெருப்பு குழம் புகளும் புகையுமாக காணப்படுகிறது. முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் விழும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் ரசிய அதிபர் புதினை தொலை பேசியில் தொடர்பு கொண்டு 1.30 மணி நேரம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத் தார்.
இதற்கு உக்ரைன் மீதான தாக்குதலை குறைக் கப் போவதில்லை என புதின் பதில் அளித்ததாக அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதினின் பொறுப்பற்ற செயல்கள் அய்ரோப்பா வின் பாதுகாப்பிற்கு அச் சுறுத்தலாக உள்ளது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார். போரிஸ் ஜான் சன் கூறும் போது ரசிய அதிபர் புதினின் பொறுப் பற்ற நடவடிக்கைகள் இப்போது அய்ரோப்பா முழுவதிலும் பாதுகாப் பிற்கு நேரடியாக அச்சு றுத்தலாக உள்ளது என்று கூறினார்.
No comments:
Post a Comment