அய்ரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரசிய ராணுவம் கைப்பற்றியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

அய்ரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரசிய ராணுவம் கைப்பற்றியது

கீவ், மார்ச் 5- உக்ரைன் நாடு மீது ரசியா கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண் டுகளை வீசி தாக்கினர்.

    அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகிய வற்றை குறி வைத்து தாக் குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற் பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக் கப்பட்டதாக ரசியா தெரிவித்தது.

    அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரசிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரசிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

    அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள் ளும் ரசிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்ற னர். அவர்களுக்கு எதி ராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர் களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரசிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

    ரசியாவின் தாக்குத லால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டை யிட்டு வருகின்றனர்.

    உக்ரைன் மீதான ரசிய படையெடுப்பு 9ஆவது  நாளை எட்டியுள்ளது, பலர் எதிர்பார்க்காத வகை யில் உக்ரேனியப் படை கள் ரசிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால்  மோதல் உட னடியாக முடிவுக்கு வர வில்லை.

    இந்த நிலையில், உக் ரைனில் உள்ள அய்ரோப் பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரசிய ராணுவம் கைப்பற்றி உள்ளது. ஜபோரிஜியா வில் உள்ள அய்ரோப்பா வின் மிகப்பெரிய அணு மின் நிலைய தளத்தை ரசிய ராணுவம் கைப்பற்றி யுள்ளது. 

    உக்ரைனில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் கள் ரசிய படைகளுக்கு துணையாக  போகும் காட்சிகளை ரசியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment