ஈரான் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

ஈரான் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி

துபாய், மார்ச் 5- அமெரிக்கா, சீனா, ரசியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அய்ரோப்பிய கூட்டமைப்புடன் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப் பந்தம் ஒன்றை ஏற்படுத் தியது. ஆனால் இந்த ஒப் பந்தம், அமெரிக்க நல னுக்கு எதிரானது என்று கூறி அதில் இருந்து வில குவதாக 2018இல் அமெ ரிக்க அதிபராக இருந்த போது டிரம்ப் அறிவித் தார்.

    அதில் இருந்து ஈரா னுக்கும், அமெரிக்காவுக் கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

    இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனாலும் அந்த திட்டங் கள் எதுவுமே வெற்றி பெறாதது பெருத்த சோக மாக ஈரானுக்கு அமைந் துள்ளது.

    கடந்த ஞாயிற்றுக் கிழ மையன்று அந்த நாட்டின் செம்மான் மாகாணத்தில் இமாம் கொமேனி விண் வெளித்தளத்தில் இருந்து ஒரு செயற்கைக்கோளு டன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இது மேக் ஸார் டெக்னாலஜிஸ் செயற்கைக் கோள் மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

    ஏவுதளத்தில் ராக் கெட் ஸ்டாண்ட் எரிந்து சேதம் அடைந்திருப்பதை யும், வாகனங்கள் அதைச் சுற்றி வந்ததையும் செயற் கைக் கோள் படம் காட்டு கிறது.

    வெற்றிகரமான ஏவுதல்கள் பொதுவாக ராக்கெட் கேண்ட்ரிகளை சேதப்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment