புதுடில்லி, மார்ச் 5- நாட்டின் ஏற்றுமதி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 22.36 சதவீதம் அதிகரித்து, 2.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து, ஒன்றிய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதி கரித்து, 2.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொறியியல் பொருட்கள், பெட்ரோலியம், ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்ததை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதியும் அதி கரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில், இறக் குமதி 35 சதவீதம் அதிகரித்து, 4.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலி யம், கச்சா எண்ணெய் ஆகி யவை இறக்குமதி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.இதையடுத்து, நாட்டின் வர்த் தக பற்றாக்குறை 1.61 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்து உள்ளது.வர்த்தக பற்றாக்குறை என்பது, ஏற்று மதிக்கும் இறக்குமதிக்கும் இடையே உள்ள வித்தியாச மாகும்.
நாட்டின் வர்த்தக பற்றாக் குறை, கடந்த ஆண்டு பிப்ர வரியில், 99 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், வர்த்தக பற்றாக் குறை 13.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் இறக்குமதி, கடந்த பிப்ரவரியில் 11.45 சதவீதமும்; எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி 29 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment