ரசியாவை எதிர்த்து ஜப்பானியர்கள் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

ரசியாவை எதிர்த்து ஜப்பானியர்கள் பேரணி

டோக்கியோ, மார்ச் 7- ரசியா உக்ரைன் மீது 12ஆவது நாளாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் போரில் ஈடுபட்ட ரசியா, ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. 

    உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரசியா கண்டு கொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், ரசியா மீது பல்வேறு நாடுகள் பொரு ளாதார தடையை விதித்து வருகின்றன.

    இந்த நிலையில், உக்ரைன் மீதான ரசியாவின் ஆக்கிர மிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் டோக்கியோவில் பேரணி நடத்தினர். அவர்கள், “போரை நிறுத்துங்கள். உயிர்களைப் பாதுகாக்கவும்." சிலர் "நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம்" என்று எழுதப்பட்ட பலகை களுடன் பேரணி நடத்தினர். 

No comments:

Post a Comment